திருகோணமலையில், விபத்தில் சிக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (01) இரவு இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணை
சம்பவத்தில் முத்துச்சேனையைச் சேர்ந்த 21 வயது ஜமனராஜ் ஜதுர்ஷன் என்பவரே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், ஈச்சிலம்பற்று காவல் பிரிவுக்குட்பட்ட புன்னையடி பகுதியில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.
இலங்கைத்துறை முகத்துவாரத்தில் இருந்து புன்னையடி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து பாதையை விட்டு விலகி இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளது.
விபத்து சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஈச்சிலம்பற்று காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
