உலக அரசியல் பதற்றங்கள், காலநிலை மாற்றத்தின் தாக்கங்கள் மற்றும் தொழில்நுட்பத்தின் வேகமான வளர்ச்சி என காலம் மாறி வரும் இந்த காலகட்டத்தில், 2026 இல் உலகத்தில் நடக்கக்கூடிய முக்கிய தாக்கங்கள் குறித்து மறைந்த பல்கேரிய தீர்க்கதரிசியான பாபா வாங்காவின் கணிப்புகள் நிஜமாகுமா என்கிற கேள்வியும் எழுந்து வருகிறது.

போர்கள், இயற்கை பேரழிவுகள், செயற்கை நுண்ணறிவின் ஆதிக்கம் மற்றும் வேற்றுகிரகவாசிகளுடனான முதல் தொடர்பு என, அவரது கணிப்புகள் மனிதகுலத்தின் எதிர்காலம் குறித்த அச்சத்தையும், ஆச்சரியத்தையும் ஒரே நேரத்தில் ஏற்படுத்தி இருக்கின்றன.

2026 இல் காத்திருக்கும் ஆபத்து ; பாபா வாங்காவின் திகிலை எகிறவைக்கும் கணிப்புகள் | Baba Vanga Warns Of Danger In 2026 Ahead

2026ல் காத்திருப்பது என்ன?

2026ஆம் ஆண்டு உலகிற்கு பெரும் திருப்புமுனையாக அமையக்கூடும் என பாபா வாங்கா கணித்துள்ளது உலகம் முழுக்க விவாதத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.

அவரது கணிப்புகளில், உலகின் பல பகுதிகளை பாதிக்கக்கூடிய பேரழிவு தரும் இயற்கை சீற்றங்கள் பற்றிய எச்சரிக்கைகளும் இடம்பெற்றுள்ளன.

மூன்றாம் உலகப் போர் தொடங்கக்கூடும் என்றும் இந்தியா மீது பாகிஸ்தான் பாரிய போர் கொடுத்து இந்தியாவை தனது பூரண கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் எனவும், இதற்குப் பின்னால் சீனா இருக்கும்என அவர் கணித்ததாக தெரிவிக்கப்படுகிறது. உலகின் பல பகுதிகளில் அதிகரித்துவரும் அரசியல் மற்றும் ராணுவ பதற்றங்கள், ரஷ்யா மற்றும் அமெரிக்கா இடையேயான மோதல் போன்ற சூழ்நிலைகளை அவர் முன்னதாகவே எச்சரித்ததாக அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர். இவை அனைத்தும் சேர்ந்து ஒரு உலகளாவிய மோதலுக்கு வழிவகுக்கலாம் என்பதே அவரது கணிப்பின் மையமாக உள்ளது.

2026 இல் காத்திருக்கும் ஆபத்து ; பாபா வாங்காவின் திகிலை எகிறவைக்கும் கணிப்புகள் | Baba Vanga Warns Of Danger In 2026 Ahead

நிலநடுக்கங்கள், எரிமலை வெடிப்புகள் மற்றும் தீவிர வானிலை நிகழ்வுகள் அதிகரிக்கும் என்றும், பூமியின் நிலப்பரப்பில் சுமார் 7 முதல் 8 சதவீதம் வரை இத்தகைய பேரழிவுகளால் பாதிக்கப்படக்கூடும் என்றும் அவர் கூறியதாக நம்பப்படுகிறது. LADbible வெளியிட்ட அறிக்கைகள் இதை மேற்கோள்காட்டுகின்றன.

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மிகப்பெரிய முன்னேற்றம் அடையும் என்றும், அது மனித குலத்தின் பல அம்சங்களில் ஆதிக்கம் செலுத்தும் நிலையை அடையும் என்றும் பாபா வாங்கா கணித்ததாக நம்பப்படுகிறது.

2026 இல் காத்திருக்கும் ஆபத்து ; பாபா வாங்காவின் திகிலை எகிறவைக்கும் கணிப்புகள் | Baba Vanga Warns Of Danger In 2026 Ahead

 பூமியின் வளிமண்டலத்திற்குள் ஒரு பிரம்மாண்டமான விண்கலம் நுழையும் என்றும், அதன் மூலம் மனிதர்கள் வேற்றுகிரக உயிரினங்களுடன் தொடர்பு கொள்வார்கள் என்றும் அவர் கூறியதாக நம்பப்படுகிறது.

இவ்வாறாக, பாபா வாங்காவின் 2026 கணிப்புகள் மனிதகுலத்தின் எதிர்காலம் குறித்த அச்சத்தையும், ஆச்சரியத்தையும் ஒரே நேரத்தில் ஏற்படுத்துகின்றன. எனினும், அவை நிஜமாகுமா, இல்லையா என்பதை காலம்தான் தீர்மானிக்கும்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments