தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக மேற்கொள்ளப்படவிருக்கும் போராட்டத்திற்கு அனைவரும் மத பேதங்களின்றி, கலந்து கொள்ளுமாறு சமூக அரசியல் ஆய்வாளர் சி.அ.ஜோதிலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
விடுக்கப்பட்ட கோரிக்கை
கட்சி பேதம் மற்றும் பொது அமைப்பு பாகுபாடுகளை கடந்து அனைவரும் தையிட்டி போராட்டத்தில் எதிர்வரும் மூன்றாம்(3) திகதி கலந்து கொள்ள வேண்டும்.

இதன் ஊடாக ஒரு வலுவான செய்தியை இலங்கை அரசாங்கத்திற்கும் சர்வதேசத்திற்கும் சொல்லக்கூடியதாகவும், அழுத்தம் கொடுக்கக் கூடியதாகவும் இருக்கும்.
எனவே, அனைவரும் கலந்துக் கொண்டு எமது வலுவான எதிர்ப்பை வெளிப்படுத்துமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.
