உனவடுன கடற்கரையில் உள்ள ஒரு உணவகத்திற்கு அருகில் அவுஸ்திரேலிய பத்திரிகையாளர் ஒருவரிடமிருந்து கைப்பையை திருடிய சந்தேக நபரை உனவடுன சுற்றுலா காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
குறித்த கைப்பையில் பெறுமதிக்க தொலைப்பேசி, வங்கி அட்டைகள் மற்றும் பணம் இருந்தாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கைது நடவடிக்கை
இளம் பெண்ணான சம்பந்தப்பட்ட அவுஸ்திரேலிய பத்திரிகையாளர் தனி பயணமாக இலங்கைக்கு வந்திருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், உனவடுன சுற்றுலா காவல்துறையில் முறைப்பாடு அளிக்கப்பட்டதை தொடர்ந்து, இன்று(04) சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதன்படி, கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நாளை (05) காலி நீதவான் நீதிமன்றத்தில் முற்றபடுத்தப்பட உள்ளார்.
