வெனிசுலா  ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவின் அனைத்து சொத்துகளையும் முடக்கி உள்ளதாக சுவிட்சர்லாந்து அரசு அறிவித்துள்ளது.

அமெரிக்காவுக்குள் போதை பொருட்களை கடத்துவதாக குற்றஞ்சாட்டி, அந்நாட்டு படைகளால் வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ, அவரின் மனைவி சிலியா புளோரஸ் சிறை பிடிக்கப்பட்டனர்.

வெனிசுலா ஜனாதிபதியின் சொத்துகளுக்கு நேர்ந்த கதி ; சுவிட்சர்லாந்து அரசின் அதிரடி | Swiss Government Seizes Assets Venezuela President

சொத்துகள் முடக்கம்

அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு பல உலக நாடுகள் ஆதரவாகவும், எதிராகவும் கருத்துகளை வெளியிட்டு வருகின்றன. இந் நிலையில், வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவின் அனைத்து சொத்துகளையும் முடக்குவதாக சுவிட்சர்லாந்து அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து சுவிட்சர்லாந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறது அதில்

நிக்கோலஸ் மதுரோ அல்லது அவருடன் தொடர்புள்ளவர்கள் சுவிட்சர்லாந்தில் வைத்திருக்கும் எந்தவொரு சொத்தையும் உடனடியாக முடக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. சொத்து முடக்கம் உடனடியாக இன்று முதல் முடக்கத்துக்கு வந்துள்ளது.

மறு அறிவிப்பு வரும் வரை இந்த உத்தரவு 4 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும். ஏதேனும் சொத்துகள் சட்ட விரோதமானவை என்று தெரிய வந்தால், அவை வெனிசுலா மக்களுக்கு பயன்படும் வகையில், சுவிட்சர்லாந்து அரசு தம்மால் ஆன அனைத்து உதவிகளையும் செய்யும்.

தற்போதுள்ள சூழ்நிலையில், சட்ட விரோதமாக சம்பாதித்த எந்தவொரு சொத்தையும், சுவிட்சர்லாந்தில் இருந்து வெளியே மாற்ற முடியாது என்பதை உறுதி செய்து கொள்ள விரும்புகிறோம். இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments