கிளிநொச்சி, கல்மடு நகர் பகுதியில் இன்று (06) ஆலய வளாகத்தில் சிரமதானப் பணியில் ஈடுபட்டிருந்த இளைஞர் ஒருவர் பாம்பு கடிக்கு இலக்காகிப் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

மேலதிக விசாரணை

சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய ஶ்ரீகாந்தன் கிருசிகன் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பாம்பு கடிக்கு இலக்கான இளைஞனை உடனடியாக தர்மபுரம் வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, குறித்த இளைஞனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் இராமநாதபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments