தென்னிலங்கையில் நபர் ஒருவர் கடத்தப்பட்டு, அவரின் உடற்பாகங்கள் வெட்டப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹக்மன பகுதியில் இரவு வேளையில் நபர் ஒருவர் கடுத்தப்பட்டு, நபரின் கைகளின் கீழ் பகுதியை வெட்டி நிலையில், பாகங்களுடன் தப்பிச் சென்றுள்ளனர்.

பொலிஸார் விசாரணை

வெட்டுக் காயங்களுக்கு உள்ளான நபர் முதலில் கிரிந்த மருத்துவமனையிலும் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மாத்தறை பொது மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டார்.

பாதிக்கப்பட்ட நபர் ஹக்மன, கொங்கல மத்திய பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

தென்னிலங்கையில் பயங்கரம் ; வெட்டப்பட்ட கைகள் பாகங்களை தேடும் பொலிஸ் விசாரணை | Police Investigation Looking Severed Hand Parts

கடந்த ஆண்டு ஒகஸ்ட் மாதம் 8ஆம் திகதியன்று இந்த சந்தேக நபர் மீது அசிட் தாக்குதல் நடத்தப்பட்டதற்கு பழிவாங்கும் விதமாக சந்தேக நபர்கள் இந்த நபரின் கைகளை வெட்டியுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட நபர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களைக் கைது செய்வதற்கும், வெட்டப்பட்ட இரண்டு கைகளின் பாகங்களைக் கண்டுபிடிப்பதற்கும் ஹக்மன பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments