இலங்கை அரசுக்கு பத்து கடற்படை உலங்கு வானூர்திகளை அமெரிக்கா வழங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், அமெரிக்கக் கடற்படையின் டிஹெச்-57 ரகத்தைச் சேர்ந்த பத்து கடற்படை உலங்கு வானூர்திகள் இலங்கையின் மீட்புப் படைகளின் பயன்பாட்டிற்காக விரைவில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை அமெரிக்க தூதர் ஜூலி சங் அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பாதுகாப்புப் பொருள்கள்
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “நம்பகத்தன்மைக்காக வடிவமைக்கப்பட்ட இந்த உலங்கு வானூர்திகள் அதிகப்படியான பாதுகாப்புப் பொருள்கள் திட்டத்தின் கீழ் வழங்கப்படுகின்றன.

உபகரணங்களுக்கான எந்தவிதச் செலவும் இன்றி இந்த உலங்கு வானூர்திகள் வழங்க முடிகின்றது என்பதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன்” என அவர் தெரிவித்துள்ளார்.
