செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திப் பெண்களின் புகைப்படங்கள் தவறாகச் சித்தரிக்கப்படுவதால், எக்ஸ் சமூக வலைதளத்தை முடக்கப் போவதாகப் பிரித்தானிய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

எலான் மஸ்கிற்குச் சொந்தமான ‘எக்ஸ்’ சமூக வலைதளத்தில் ‘குரோக்’ என்ற செயற்கை நுண்ணறிவு வசதி செயற்பட்டு வருகிறது.

பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஆபாச புகைப்படங்கள் ;எக்ஸ் சமூக வலைதளத்திற்கு எச்சரிக்கை! | Women Pornographic Pics Uk Warned Closed Twitter

 இங்கிலாந்து இளவரசி வேல்ஸ்  உட்படப் பலரது புகைப்படங்கள்

இத்தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திப் பெண்கள் மற்றும் குழந்தைகளின் புகைப்படங்கள் ஆபாசமாக மாற்றியமைக்கப்பட்டுப் பரப்பப்படுவதாகக் கடந்த சில நாட்களாகப் புகார்கள் எழுந்தன.

குறிப்பாகப் இங்கிலாந்து இளவரசி வேல்ஸ் உட்படப் பலரது புகைப்படங்கள் மிகவும் மோசமான வகையில் போலியாக உருவாக்கப்பட்டு இணையத்தில் வைரலானது உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் எக்ஸ் தளம் பெண்களுக்கு எதிரான வன்முறையைத் தடுக்கத் தவறிவிட்டதாகக் கூறி, இங்கிலாந்து பாராளுமன்ற பெண்கள் மற்றும் சமத்துவக் குழு இத்தளத்தைப் பயன்படுத்துவதை நிறுத்துவதாக 7ஆம் திகதியே அறிவித்துவிட்டது.

தற்போது இப்பிரச்னை தீவிரமடைந்துள்ள நிலையில், இங்கிலாந்தின் ஒன்லைன் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் எக்ஸ் நிறுவனத்தின் மீது மிகக்கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments