சமையலில் அதிகம் பயன்படுத்தும் மற்றும் மருத்துவ குணம் அதிகம் நிறைந்த வெந்தயத்தை இரவு தூங்கும் முன் நீரில் ஊற வைத்து காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் வெந்தய் நீர் குடிப்பது உடலுக்கு மிகவும் நன்மைகளை வாரி வழங்கும்.
ஆயுர்வேதத்திலும் வெந்தய் நீர் பல பிரச்சனைகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு வருகிறது.

வெந்தய நீரைக் குடிப்பதால் என்னென்ன நன்மைகள்
ஹார்மோன் பிரச்சனைகளை சரி செய்யும்
உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு ஹார்மோன் சமநிலையின்மை தான் முக்கிய காரணமாக உள்ளது.
குறிப்பாக உடலில் ஹார்மோன் சமநிலையில் இல்லாவிட்டால், அது உடல் சோர்வு, தூக்க பிரச்சனைகள், மனநிலை மாற்றங்கள், உடல் எடையில் மாற்றங்கள், மந்தமான மனநிலை போன்ற பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
வெந்தய நீரை காலையில் குடிப்பதன் மூலம், உடலில் ஹார்மோன்கள் சமநிலைப்படுத்தப்பட்டு, ஆரோக்கிய பிரச்சனைகளைத் தடுக்கலாம்.

இதய நோயின் அபாயத்தை குறைக்கும்
வெந்தய விதைகளில் டையோஸ்ஜெனின் எனப்படும் செயலில் உள்ள மூலப்பொருள் உள்ளது. இது உடலானது கொழுப்புக்களை எவ்வாறு செயலாக்குகிறது என்பதை சரிசெய்யும் ஆற்றலைக் கொண்டுள்ளது.
வெந்தய விதைகளில் பாலிஃபீனால்கள் மற்றும் ஃப்ளேவோனாய்டுகள் உள்ளிட்ட ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளன. இவை ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை எதிர்த்துப் போராடுகின்றன மற்றும் ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்தைக் குறைக்கின்றன.
அதோடு நாள்பட்ட நோய்களின் அபாயத்தையும் குறைத்து, இதய நோயின் அபாயத்தையும் குறைக்கின்றன.
செரிமான கோளாறை சரிசெய்யும்
தற்போது நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை செய்யும் பழக்கம், ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம் மற்றும் மோசமான தூக்க முறைகளால் செரிமான பிரச்சனைகள் அதிகரிக்கின்றன.
காலையில் வெறும் வயிற்றில் ஊற வைத்த வெந்தய நீரை குடிப்பதால், மலச்சிக்கல், அமிலத்தன்மை மற்றும் வீக்கம் போன்ற செரிமான பிரச்சனைகள் தடுக்கப்பட்டு, செரிமான மண்டலத்தின் ஆரோக்கியம் மேம்படும்.

எடை இழப்பு சிறந்த பயன் அளிக்கும்
உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் இந்த நீரைக் குடிப்பதால் நல்ல பலனைப் பெறலாம் உடல் பருமனால் அவதிப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு வெந்தய நீர் மிகச்சிறந்த பானம்.
ஏனெனில் ஊறவைத்த வெந்தய விதைகளில் நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. அவை நீண்ட நேரம் வயிற்றை நிரம்பியிருக்கச் செய்து பசியைக் குறைக்கும். ஊறவைத்த வெந்தய விதைகளின் நீரைக் குடிப்பது ஒட்டுமொத்த குளுக்கோஸ் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தும்.
