கொழும்பின் புறநகர் பகுதியிலுள்ள பிரபல ஹோட்டல் ஒன்றின் உரிமையாளர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தெஹிவளை மெரின் டிரைவ் பகுதியில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றின் உரிமையாளர் மீது இனந்தெரியாத நபர்களால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த அவர், உடனடியாக களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சையின் பலனின்றி உயிரிழந்துள்ளார்.
துப்பாக்கி சூடு
சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்த தெஹிவளைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
