உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலையின் 52ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்றையதினம் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

யாழில் உள்ள தமிழாராய்ச்சி படுகொலை நினைவேந்தல் தூபியடியில், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இந்த நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது உயிர் நீத்தவர்களுக்கு அகவணக்கம் செலுத்தி, பொதுச் சுடர் ஏற்றப்பட்டு, மலர்மாலைகள் அணிவிக்கப்பட்டு, மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

1974ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 3ஆம் திகதி தொடக்கம் 10ஆம் திகதிவரை யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற நான்காவது உலக ஆராய்ச்சி மாநாட்டில் ஏற்பட்ட கலவரத்தில் ஒன்பது பேர் படுகொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

யாழ். உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலையின் 52 ஆவது நினைவேந்தல் | Ulaga Tamilar Manadu Massacre Remembrance
யாழ். உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலையின் 52 ஆவது நினைவேந்தல் | Ulaga Tamilar Manadu Massacre Remembrance

செய்திகள் – கஜிந்தன்

முதலாம் இணைப்பு

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 52 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று  இடம்பெற்றது.

சீரற்ற காலநிலைக்கு மத்தியிலும் இலங்கை தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் இன்று(10.01) காலை 9.30 மணிக்கு யாழ்ப்பாணம் முற்றவெளியில் அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவாலயத்தில் நினைவேந்தல் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.

படுகொலை 

இந்த நினைவேந்தலில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சி.வீ.கே.சிவஞானம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சொலமன் சிறில், யாழ் மாநகர முதல்வர் மதிவதனி விவேகானந்தராஜா உள்ளிட்ட உள்ளூராட்சி சபைகளின் தவிசாளர்கள், உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

யாழ். உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலையின் 52 ஆவது நினைவேந்தல் | Ulaga Tamilar Manadu Massacre Remembrance

1974ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 3ஆம் திகதி தொடக்கம் 10ஆம் திகதிவரை யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற நான்காவது உலக ஆராய்ச்சி மாநாட்டில் ஏற்பட்ட கலவரத்தில் ஒன்பது பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

நீங்காத வடு

உலகளாவிய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாநாட்டை யாழ்ப்பாணத்தில் நடத்தவிடாமல் அப்போதைய சிறிமாவோ பண்டார நாயக்க தலைமையிலான அரசு, காவல்துறையினரை அனுப்பி கலவரத்தை ஏற்படுத்தியது. இதன்போது ஒன்பது தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

யாழ். உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலையின் 52 ஆவது நினைவேந்தல் | Ulaga Tamilar Manadu Massacre Remembrance

அதுமட்டுமன்றி தமிழர்கள் மனத்தில் நீங்காத வடுக்களாக இந்தப்படுகொலைச் சம்பவம் பதியப்பட்டது என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments