இலங்கையில் அண்மைக்காலமாக முக்கிய இராஜதந்திர நகர்வுகள் இடம்பெற்று வரும் நிலையில், இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தனது பதவிக்காலம் நிறைவடைந்ததையடுத்து நாட்டை விட்டு செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தகவல்களின்படி, ஜனவரி 16ஆம் திகதியுடன் அவரது பதவிக்காலம் முடிவடைந்துள்ளது.

கடந்த கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதராக ஜூலி சங் பணியாற்றி வந்தார்.

இலங்கை–அமெரிக்க உறவுகளில் திருப்பம்?கொழும்பில் இருந்து வெளியேறும் ஜூலி சங் | Julie Sung Leaves Colombo Sri Lanka Us Relations

தனது பதவிக்காலத்தின் ஆரம்பத்திலிருந்தே, அமெரிக்காவின் தேசிய நலன்களை முன்னேற்றுவதும், அமெரிக்க மக்களுக்கு பயனளிக்கும் வகையில் இலங்கையுடன் உறுதியான உறவை உருவாக்குவதும் தனது முதன்மையான குறிக்கோளாக இருந்ததாக ஜூலி சங் தெரிவித்துள்ளார்.

அவரது பதவிக்காலத்தின் போது, இலங்கை–அமெரிக்க இருதரப்பு உறவுகள், பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அரசியல் தொடர்புகளில் பல்வேறு முக்கிய முன்னேற்றங்கள் ஏற்பட்டதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments