யாழ்ப்பாணம் – மன்னார் வீதி, தென்மராட்சி நாவற்குழி பகுதியில் டிப்பர் வாகனமொன்று வீதியை விட்டு விலகி, மதிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இச்சம்பவம் இன்று (15) அதிகாலை 5.05 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

மேலதிக விசாரணை

சட்டவிரோத மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனமே, வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

பொங்கல் தினத்தில் யாழில் இடம்பெற்ற கோர விபத்து ; கிளிநொச்சியைச் சேர்ந்த இருவர் உயிரிழப்பு | Tipper Accident Jaffna Two People Kilinochchi Die

இவ்விபத்தில் கிளிநொச்சி, வட்டக்கச்சியைச் சேர்ந்த இரு இளைஞர்களே உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் ஒருவரது சடலம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையிலும், மற்றவரது சடலம் யாழ். போதனா வைத்தியசாலையிலும் வைக்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments