உறவுகள் அஞ்சலிப்பதற்கான உரிமையினை உறுதிப்படுத்தும் வகையில் கோப்பாய் மாவீரர் துயிலும் இல்ல காணியினை விடுவிக்க அபிவிருத்திக் குழுவில் தீர்மானம் உடன் நிறைவேற்றப்பட வேண்டும் என வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளர் தியாகராஜா நிரோஷ் வலியுறுத்தினார்.

இராணுவத்தினரால் விடுவிக்கப்படவேண்டிய காணிகள் விடயத்தில், 19.42 ஏக்கர் நிலம் உரிமையாளர் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சு – சுவிகரிப்பு தொடர்பான தற்போதைய நிலை அரச காணி (03.09.2014) இராணுவத்தினருக்குக் கையளிப்புச் செய்யப்பட்டுள்ளது என நேற்று செவ்வாய்க்கிழமை (13) இடம்பெற்ற கோப்பாய் பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பிரஸ்தாபிக்கப்பட்டது.

மாவீரர் துயிலும் இல்ல காணி 

இதனையடுத்து இவ்விடயத்தில் குறுக்கிட்டு பேசிய வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் நிரோஷ் , மாவீரர் துயிலும் இல்ல காணி இராணுவத்தினருக்கு கையளிப்புச் செய்யப்பட்டுள்ளது என்ற தகவலை நாம் புதிதாக தற்போதே கேள்விப்படுகின்றோம்.

யாழ். கோப்பாய் மாவீரர் துயிலும் இல்ல விடுவிப்பு விவகாரம் - அரசுக்கு அழுத்தம் | Ordered Military Withdrawal From Ltte Cemeteries

அது முன்னைய காலங்களில் இடம்பெற்றதாக தங்களால் வெளிப்படுத்தப்படுகிறது. இந்த இரகசிய தகவலை நாம் அறியும் நிலையில், நாம் அதனை கடுமையாக எதிர்க்கின்றோம்.

துயிலும் இல்லத்தில் எமது உறவுகளின் வித்துடல்கள் விதைக்கப்பட்டிருக்கின்றன. அங்கு மரணித்தவர்களை நினைவு கொள்ளும் உரிமை, அஞ்சலிக்கும் உரிமை எமது உறவுகளுக்கு கிட்டவேண்டும்.

காணி கையளிப்பு சட்டங்கள்

இதற்கு பதிலளித்த அபிவிருத்திக் குழுவின் தலைவர் ரஜிவன் எம்.பி, இது 2014 ஆம் ஆண்டு இராணுவத்திற்கு வழங்கப்பட்டுள்ளது என்றார். இதனையடுத்து குறுக்கிட்ட தவிசாளர் 2014 ஆம் ஆண்டு எந்த அடிப்படையில் கையளிக்கப்பட்டிருக்கின்றது? காணி கையளிப்பு சட்டங்கள் எவ்வாறு பின்பற்றப்பட்டன? எனக் கேள்வி எழுப்பினார்.

யாழ். கோப்பாய் மாவீரர் துயிலும் இல்ல விடுவிப்பு விவகாரம் - அரசுக்கு அழுத்தம் | Ordered Military Withdrawal From Ltte Cemeteries

இதற்கு பதிலளித்த அபிவிருத்திக்குழுவின் தலைவர் ரஜிவன் எம்.பி, மாவீரர் துயிலும் இல்ல நிலங்களை அரசாங்கம் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது என்றார். அது நடக்கும் என்றார்.

இராணுவம் இருக்கின்ற பெருமளவான காணிகள் விடுவிக்கப்படும் என்றார். தையிட்டி விகாரை கூட அவ்வாறு தான் என பதிலளித்தார்.

காணிகளை நிர்வகிக்க முடியும்

இதனை ஏற்றுக் கொள்ளாத தவிசாளர், இக் கூட்டத்தில் ஏன் இதில் இராணுவத்திற்கு கையளிக்கப்பட்டுள்ளதாக தகவல் கூறப்பட்டுள்ளது. அவ்வாறான கருமங்கள் எதுவும் காணி பயண்பாட்டுக்குழு ஊடாக நடந்துள்ளதா என தவிசாளர் துருவித் துருவி வினா தொடுத்தார்.

இதற்கு பதிலளித்த பிரதேச செயலாளர் அது விடுவிக்கப்படவேண்டும் என்பதற்காகத்தான் என்றார். காணி உத்தியோகத்தர் பதிலளிக்கையில் சிறைச்சாலை திணைக்களத்திற்குச் சொந்தமான காணி அது 2014 இல் பாதுகாப்பப் படைகளுக்கு வழங்கப்பட்டது என்றார்.

மீண்டும் தவிசாளர், இது எந்தத் திணைக்களத்திற்கு வழங்கப்பட்ட காணியாகவும் இருக்கலாம். இக் காணியில் இருப்பது ஆயிரக்கணக்கானவர்களின் வித்துடல்கள் விதைக்கப்பட்டுள்ளன. இங்கு நினைவு கூர்வதற்கான உரிமை உறுதிப்படுத்தப்படவேண்டும்.

அடிப்படையில் மயானங்கள் உள்ளராட்சி மன்றங்களுக்கு பாரதீனப்படுத்தப்படவேண்டும். சட்ட ரீதியில் உள்ளுராட்சி மன்றங்களே அக் காணிகளை நிர்வகிக்க முடியும் எனத் தெரிவித்தார்.

அபிவிருத்திக்குழு தீர்மானம் 

இதற்கு பதிலளித்த அபிவிருத்திக்குழுவின் தலைவர் ரஜிவன் எம்.பி, இவ்விடயம் பாதுகாப்பு அமைச்சு, ஜனாதிபதி செயலகத்துடன் தொடர்புடையது என்றார். இதற்கு பதிலளித்த தவிசாளர் இங்கு உத்தியோகத்தர்களால் வெளியிடப்படும் தகவல்களின் அடிப்படையில் துயிலும் இல்ல காணி தொடர்பில் பல மாற்றங்கள் வெளித்தெரியாது நடந்துள்ளன.

யாழ். கோப்பாய் மாவீரர் துயிலும் இல்ல விடுவிப்பு விவகாரம் - அரசுக்கு அழுத்தம் | Ordered Military Withdrawal From Ltte Cemeteries

நீங்கள் அரசாங்கத்தின் முக்கிய பாராளுமன்ற உறுப்பினர் – அபிவிருத்திக் குழுத்தலைவர் எனவே அரசாங்கம் என்று வேறு ஒரு சக்தி இருப்பதாக நாம் கூறக்கூடாது. அரசாங்க முடிவில் நீங்கள் செல்வாக்குச் செலுத்த வேண்டும். விரைவில் துயிலும் இல்லங்கள் விடுவிக்கப்படவேண்டும்.

அதற்கு வசதியாக அபிவிருத்திக்கழுக்களில் தீர்மானம் எடுங்கள் என்றார். இவ் அபிவிருத்திக்குழு தீர்மானம் ஒன்றை எடுத்திருப்பது பாதுகாப்பானது. இக் காணி திணைக்களம் ஒன்றுக்கு வழங்கப்பட்டுள்ளதால் அதனை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படுகின்றது என அபிவிருத்திக்குழுவின் தலைவர் பதிலளித்தார்.

அதற்கு கேள்வி தொடுத்த தவிசாளர் நீங்கள் உறுதியாக கூறாது சமாளித்த கூறுகின்றீர்கள். ஆகவே இக் காணி சிறைச்சாலைத் திணைக்களத்திடம் இருந்து பிரதேச செயலகத்திற்கு விடுவிக்கப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகின்றது என்று நீங்கள் உத்தரவாதமளிப்பதை பதிவு செய்யுங்கள் என கூறினார். 

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments