கேணல் கிட்டு உள்ளிட்ட பத்து மாவீரர்களின் 33ஆம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு யாழ் கிட்டு பூங்காவில் தளபதி கிட்டுவின் போராட்ட வாழ்வியலைச் சித்தரிக்கும் அரிய புகைப்படங்கள் மற்றும் ஆவணங்கள் மக்கள் பார்வைக்காகக் காட்சிப்படுத்தப்பட்டன.
தமிழ் தேசிய அரசியலின் தியாக வரலாற்றை மீண்டும் ஒருமுறை உரக்கச் சொல்லும் முயற்சியாக இது அமைகின்றது.
உணர்வுப்பூர்வமாக நடைபெற்ற இந்த நிகழ்வில், பெருமளவிலான மக்கள் திரண்டு தளபதி கிட்டுவின் வரலாற்றுத் தடயங்களைப் பார்வையிட்டமையானது அந்த ஆளுமை இன்றும் தமிழ் மக்கள் மத்தியில் கொண்டுள்ள செல்வாக்கைப் பிரதிபலிக்கின்றது.
இத்தகைய ஆவணக் காட்சிப்படுத்தல்கள் இடம்பெறுவது தமிழ் மக்களின் பண்பாட்டு மற்றும் அரசியல் அடையாளங்களை மீட்டெடுக்கும் ஒரு விடயமாக பார்க்கப்படுகின்றது.
கடலில் காவியமான அந்த வீரர்களின் நினைவுகள் மற்றும் இக்காட்சிப்படுத்தலின் பின்னணி குறித்து விரிவாக ஆராய்கின்றது கீழுள்ள காணொளி…
