குருணாகல் – அலவ்வ, வில்கமுவ பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரின் உடலம் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

மேலதிக சோதனை

வில்கமுவ பகுதியில் நபர் ஒருவர் உடலமாகக் கிடப்பதாகக் கிடைத்த தகவலையடுத்து, காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சடலத்தை மீட்டனர்.

துப்பாக்கிச் சூட்டு காயங்களுடன் ஆணின் உடலம் மீட்பு ; காவல்துறை விசாரணை தீவிரம் | Man Body Recov Gunshot Wounds Police Investigation

குறித்த உடலம் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் காணப்படுவதால், இது ஒரு திட்டமிட்ட கொலையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை

இந்த சம்பவத்திற்கான காரணம் என்ன? கொலையாளிகள் யார்? என்பது குறித்து அலவ்வ காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

சம்பவம் நடந்த இடத்தில் தடயவியல் நிபுணர்களின் உதவியுடன் மேலதிக சோதனைகளை நடத்த காவல்துறை திட்டமிட்டுள்ளது.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments