காசா அமைதி வாரியத்தில் சேருவதற்கான டொனால்ட் ட்ரம்பின் அழைப்பை பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் நிராகரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனையடுத்து அமெரிக்கா முன்மொழிந்த காசா அமைதி வாரியத்தில் இணைய பிரான்ஸ் மறுத்தால், 200% வரி விதிப்பேன் என டொனால்ட் ட்ரம்ப் மிரட்டியுள்ளார்.

200% வரி விதிப்பு

பிரான்ஸ் தயாரிப்பு மதுபானங்கள் மீது 200% வரி விதித்தால், ஜனாதிபதி மேக்ரான் வாரியத்தில் சேர்ந்துவிடுவார் என ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

Macron snub leads to wine tariff threat

அமெரிக்காவின் முயற்சியால் காசா (ஹமாஸ்)- இஸ்ரேல் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது.

முதல் கட்டமாக ஹமாஸ் பிணைக்கைதிகளை விடுவித்தது. அதற்குப் பதிலாக இஸ்ரேல் தங்கள் நாட்டு சிறையில் உள்ள பாலஸ்தீன கைதிகளை விடுவித்தது. இந்தநிலையில், இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

 ட்ரம்பின் அழைப்பு

இதுதொடர்பாக ஆலோசனை நடத்த ஒரு குழுவை அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அமைத்துள்ளார்.

பிரான்ஸ் மீது 200% வரி! டொனால்ட் ட்ரம்பின் பகிரங்க எச்சரிக்கை | Us Threatens Huge Tariff On French Wine

துருக்கி, எகிப்து, அர்ஜென்டினா, இந்தோனேசியா, இத்தாலி, மொராக்கோ, இங்கிலாந்து, ஜெர்மனி, கனடா மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட சுமார் 60 நாடுகளின் தலைவர்களை இந்த அமைதி குழுவில் சேருமாறு ட்ரம்ப் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்நிலையில், காசா அமைதி வாரியத்தில் சேருவதற்கான ட்ரம்பின் அழைப்பை பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான் நிராகரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments