ஈழத்தமிழர்களின் இதயபூமியான மணலாறு மீண்டும் ஒரு சிங்களக்குடியேற்றத்திற்கு தயாராக்கப்படுகிறது.
கடந்த தேர்தலில் ஆளும் அரச தரப்பு “இனப்பரம்பலை மாற்றும் எந்த குடியேற்றங்களையும் முன்னெடுக்க மாட்டோம்”, என்று கூறியிருந்த நிலையில் தற்போது தலைகீழாக மாறி மகிந்த ராஜபக்சவின் கனவை நிறைவேற்றத்துடிக்கின்றது அநுர அரசு என்ற அச்சத்தை சமூக ஆர்வலர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்.
மணலாறில் நாலாயிரத்திற்கு மேற்பட்ட சிங்களக் குடியேற்றவாசிகளை குடியேற்றும் நோக்கில், கிவுல் ஓயாத் திட்டம் விரைந்து முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் இதற்கு இந்த வாரம் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
2011-இல் மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில், 417 கோடி ரூபா செலவில் இந்தத் திட்டத்தை முன்னெடுக்க முயற்சித்தனர்.
மகாவலி அபிவிருத்தி திட்டத்தின் L வலயம் என அறியப்படும் பகுதிகளில் சிங்கள குடியேற்றங்களை ஏற்படுத்த முயற்சி செய்யப்பட்டது, ஆனால் தமிழ் மக்களின் எதிர்ப்பால் அது கைவிடப்பட்டது.
பின்னர் கோட்டாபய ராஜபக்சவின் காலத்திலும் திட்டம் தொடங்கினாலும், பொருளாதார நெருக்கடி மற்றும் மக்களின் எதிர்ப்பால் நிலைநிறுத்த முடியவில்லை. இப்போது அதே திட்டத்தை 2,345 கோடி ரூபா செலவில் விரைந்து முன்னெடுக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இந்ந நிலையில் குறித்த விவகாரம் தொடர்பில் ஒரு ஆழமான பார்வையை செலுத்துகிறது ஐபிசி தமிழின் இன்றை அதிர்வு.
சமத்துவம் பேசும் அரசின் சமூக அநீதி தொடர்பிலும் அதன் மூலம் பாதிப்படையப்போகும் தமிழ்ச்சமூகத்தின் இருப்பு தொடர்பிலும் இந்த காணொளியில் காணலாம்,
