சுவிட்ஸர்லாந்தின் செயின்ட் கேலன் (St. Gallen) நகர மாநிலத்தின் தலைவராக சமூகநலன் செயற்பாட்டாளர் துரைராஜா ஜெயக்குமார் தெரிவுசெய்யப்பட்டார்.

கடந்த (20) செவ்வாய்க்கிழமை தனது கடமைகளை அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார்.

இலங்கையிலிருந்து சுமார் 38 ஆண்டுகளுக்கு முன்னர் ஏதிலியாக சுவிட்ஸர்லாந்து சென்ற ஜெயக்குமார் துரைராஜா, பசுமை கட்சி (Green Party) சார்பில் போட்டியிட்டு, செயின்ட் கேலன் நகரின் உயரிய அரசியல் (Stadtparlament-Präsident) பதவிக்கு தேர்வாகியுள்ளார்.

செயின்ட் கேலன் (St. Gallen) என்பது ஒரு சரித்தர முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும் எனவே வரலாற்றை தமிழினம் எழுதியுள்ளது என்றே கூற வேண்டும் என்று ஜெயக்குமார் துரைராஜா தெரிவித்துள்ளார். ஐபிசி தமிழுக்கு வழங்கிய நேர்காணலிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

எங்களுடைய மரபணுவிலேயே அபாராமான திறமைகள் உள்ளது. இங்கு எனக்கு வழங்கிய அங்கீகாரமானது எமது இனத்திற்கான அங்கீகாரமாகும்.

சுவிட்ஸர்லாந்தில் யாருடைய உரிமைகளும் பறிக்கமுடிவதில்லை என குறிப்பிட்டுள்ளார்.

இதன் முழுமையான தகவல்களுக்கு கீழுள்ள காணொளியை காண்க.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments