துப்பாக்கி முனையில் தம்பதியினரை மிரட்டி கொள்ளையடித்த கும்பல் இலங்கையில் பயங்கரம்இரண்டு மாடி வீட்டிற்குள் கருப்பு நிற உடையணிந்து, கருப்பு நிற துணியால் முகத்தை மூடிய ஐந்து பேர் கொண்ட கும்பல், துப்பாக்கி முனையில் தம்பதியினரை மிரட்டி, கிட்டத்தட்ட ரூ.4 மில்லியன் மதிப்புள்ள தங்க நகைகளை கொள்ளையடித்து, பின்னர் தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதுருகிரிய, போரலுகொட சாலையில் உள்ள வீடொன்றிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

துப்பாக்கி முனையில் தம்பதியினரை மிரட்டி கொள்ளையடித்த கும்பல் இலங்கையில் பயங்கரம் | Gunpoint Robbery Of Couple Sparks

 விசாரணை

திருடப்பட்ட தங்கப் பொருட்களில் 13 பவுண் எடையுள்ள எட்டு தங்க வளையல்கள், ஒரு தங்க மோதிரம் ஆகியவை அடங்கும் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

வீட்டின் மேல் தளத்தில் உள்ள படுக்கையறைக்குள் இரவு 10.30 மணியளவில் நுழைந்த கொள்ளையர்கள், கத்தி மற்றும் கோடாரியைக் கொண்டு படுக்கையில் தூங்கிக் கொண்டிருந்த தம்பதியினரை மிரட்டி, அவர்கள் அணிந்திருந்த தங்க நகைகள் மற்றும் மொபைல் போனை திருடி, கீழே சென்று ஒரு தட்டில் இருந்த வைத்திருந்த சில்லறைகளையும் எடுத்துக்கொண்டு சென்றுள்ளனர் என்பது விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளது.

வீட்டின் தரை தளத்தில் உள்ள சமையலறை ஜன்னலின் பூட்டை உடைத்து கொள்ளையர்கள் வீட்டிற்குள் நுழைந்ததாக புகாரில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுருகிரிய பொலிஸ் பொறுப்பதிகாரி பெர்னாண்டோ உள்ளிட்ட குழு விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments