கிளிநொச்சி காவல்துறை பிரிவுக்குட்பட்ட தொண்டைமான் நகர் பகுதியில் துவிச்சக்கர வண்டியில் கடவையை கடக்க முட்பட்ட முதியவர் அனுராதபுரம் பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த யாழ் ராணி தொடருந்துடன் மோதுண்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்

குறித்த சம்பவத்தில் கிளிநொச்சி ஆனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த சபாபதி என்ற 82 வயதுடைய முதியவரே பரிதாபகரமாக உயிரிழந்தவராவார்.

தொடருந்து பாதையை கடக்க முற்பட்டபோது  விபரீதம்

விபத்தில் பலியான நபர் துவிச்சக்கர வண்டியை தூக்கிகொண்டு தொடருந்து பாதையை கடக்க முற்பட்ட போது இவ் விபத்து இடம்பெற்றுள்ளது

கிளிநொச்சியில் தொடருந்து கடவையை கடக்க முற்பட்ட முதியவருக்கு நேர்ந்த விபரீதம் | Elderly Man Died Hit By A Train In Kilinochchi

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்

இன்று இடம்பெற்ற இடத்தில் பல விபத்துக்களினால் பலர் பலியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments