நாட்டில் சுற்றுலா பகுதிகளில் திருட்டு அச்சம் ; வெளிநாட்டு சுற்றுலாப் பெண்ணிடம் கைபேசி திருட்டுரஷ்ய நாட்டுப் பெண் ஒருவரிடமிருந்த சுமார் 3 இலட்சம் ரூபாய் பெறுமதியான கையடக்கத் தொலைபேசியைத் திருடிய நபர் ஒருவரை, உனவட்டுன சுற்றுலாப் பொலிஸ் பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
குறித்த வெளிநாட்டுப் பெண் செய்த முறைப்பாட்டுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின்போதே இச் சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து, அப்பெண்ணுக்குச் சொந்தமான கையடக்கத் தொலைபேசியும் இதன்போது பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைதான சந்தேகநபர் தொடர்பில் மேலதிக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
