கொலை செயய்ப்பட்ட குடும்பஸ்தர்:நீதி வேண்டி சடலத்துடன் உறவினர்கள் ஆர்ப்பாட்டம்இரவு வேளை கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட குடும்பஸ்தர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பு வந்தாறுமூலை பகுதியில் வசிக்கும் 38 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான பத்மநாதன் பகிரதன் என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

இரவுநேரம் வயலில் இருந்த வேளை தாக்குதல்

கரடியனாறு காவல்துறை பிரிவுக்குட்பட்ட ஈரளக்குளம் சமுளையடிப் பொத்தானை என்ற இடத்திலேயே கடந்த 16.01.2026 அன்று இரவு இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றது.

கொலை செயய்ப்பட்ட குடும்பஸ்தர்:நீதி வேண்டி சடலத்துடன் உறவினர்கள் ஆர்ப்பாட்டம் | Family Member Murdered In Batticaloa

உயிரிழந்த நபர் இரவுநேரம் தனது வயலில் இருந்த வேளை குழுவாகச் சென்ற நபர்கள் இவரை கூரிய ஆயுதங்களால் தாக்கியும், வெட்டியும், அடித்தும், தாக்கியதில் படுகாயமடைந்தவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு 20 நாட்கள் வைத்தியசாலையில் அதிதிவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று புதன்கிழமை(04.01.2026) உயிரிழந்துள்ளார்.

 நீதிவேண்டி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

இந்நிலையில் இன்று வியாழக்கிழமை(05.02.2026)மரணமடைந்தவரின் சடலத்தை சுமந்தவாறு உறவினர்கள் இறந்தவருக்கு நீதி கிடைக்க வேண்டும் என கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கொலை செயய்ப்பட்ட குடும்பஸ்தர்:நீதி வேண்டி சடலத்துடன் உறவினர்கள் ஆர்ப்பாட்டம் | Family Member Murdered In Batticaloa

ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும், எனத் தெரிவித்து கொலை செய்யப்பட்டவருக்கு நீதி கோரி வந்தாறுமூலை அம்பலத்தடி சந்தியில் வீதியியை மறித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் சடலத்தை வந்தாறுமூலை பொது மயானத்தில் நல்லடக்கம் செய்துள்ளனர். 

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments