இலங்கையில் தமிழர்களின் நடைமுறை அரசு எனப்படும் “டி பெக்டோ ஸ்டேட் (De facto state)” இருந்த காலத்தில், விடுதலைப் புலிகள் தமது படையணிகளில் சிறார்களை இணைப்பதாக மேற்குலக ஊடகங்களுக்கும், அரசாங்கங்களுக்கும் “மனித உரிமைவாதிகள்” என்ற பெயரில் ஒப்பாரி வைத்த முகங்களின் மறுபக்கம் இப்போது அதிர்ச்சிகரமாக வெளிவருகிறது.

அதுவும், “சும்மா அதிருதில்லே” என்ற பாணியில் அமெரிக்காவையும் உலகையும் உலுக்கும் ஜெஃப்ரி எப்ஸ்டீன் என அடையாளப்படுத்தப்படும் பாலியல் கொடூரனின் சாம்ராஜ்யத்துடன் தொடர்புபட்ட விடயங்களில் இவர்கள் அம்பலப்படுத்தப்படுகின்றனர்.

உலகப்பரப்பைத் தற்போது பரபரப்பாக்கும் இந்தப் பாலியல் குற்றவாளி எப்ஸ்டீன், 2019 இல் தனது சிறை அறையில் மர்மமான முறையில் தவறான முடிவெடுத்து உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டாலும், அவர் குறித்த பல்லாயிரக்கணக்கான ஆவணங்களைத் தற்போது அமெரிக்க நீதித்துறை வெளிப்படுத்தி வருகின்றது.

இந்த பகிரங்கப்படுத்தல், அமெரிக்க உள்ளூர் அரங்கிலும் உலக அரங்கிலும் “இந்தப் புற்றுக்குள் இந்தப் பாம்பா?” என்ற வகையில் அதிர்ச்சிகரமாக வெளிவருகின்றன.

இதனடிப்படையில் இப்போது முதன்முறையாக, ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் தொடர்பு கொண்ட ஈழத்தமிழ் முகப் பாம்புகளும் ஏதோ ஒரு வகையில் வெளிப்பட்டுள்ளன.

கடந்த காலத்தில் தமிழர்களின் ஆயுதவழி அரசியல் உரிமைப் போராட்டத்தை, யாழ் பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம் என்ற அடையாளத்திற்குள் இருந்தபடி “கருடா சௌக்கியமா ?” என்ற பாணியில் மிக மோசமாகக் கொச்சைப்படுத்திய “கூல் (Hoole) சகோதரர்கள்” எப்ஸ்டீன் கோவைகளுக்குள் இருப்பதை அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட ஆவணங்கள் புலப்படுத்தியுள்ளன.

ஒரு காலத்தில் UTHR-J என்ற குறியீட்டைக் கொண்ட University Teachers for Human Rights (Jaffna) என்ற மனித உரிமைகளுக்கான யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தை நடத்தி, இலங்கையில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்துப் பாரபட்சமற்ற ஆவணப்படுத்தலைச் செய்வதாகக் குறிப்பிட்ட முகங்கள், இப்போது எப்ஸ்டீன் கோப்புகளுக்குள் (Files) வந்துள்ள நிலையில், இந்தப் பரபரப்பு விடயங்களை மையப்படுத்தி வருகின்றது ஐபிசி தமிழின் இன்றைய செய்தி வீச்சு…

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments