மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இலங்கையை மையப்படுத்தி அமெரிக்கா, கனடா மற்றும் பிரித்தானியா நாடுகள் விதித்துள்ள தடையானது சர்வதேச சட்டம் மற்றும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபைக்கு முரணானவை என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் நேற்று கருத்து வெளியிட்ட வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்,

“நாட்டில் கடந்த கால மனித உரிமை மீறல்கள் தொடர்பாக உள்நாட்டு வழிமுறைகளின் அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.

இலங்கையின் வெளியுறவுக் கொள்கை

எவ்வாறாயினும், இலங்கையின் வெளியுறவுக் கொள்கை மற்றும் தொடர்புடைய சர்வதேச தீர்மானங்கள் தொடர்பான சர்வதேச சட்டங்களின்படி அரசாங்கம் செயல்படும்.

இலங்கை மீதான போர்க்குற்ற விசாரணை! அநுர தரப்பின் அடுத்த கட்ட நகர்வு | War Crimes Investigation Against Srilanka

மார்ச் 2025 இல் ஐக்கிய இராச்சியத்தின் தீர்மானம் வெளியிடப்பட்டபோது, அமைச்சரவை அதில் மிகுந்த கவனம் செலுத்தியது.

மேலும் இது தொடர்பாக அரசாங்கத்தின் நிலைப்பாடும் வெளிப்படுத்தப்பட்டது. அரசாங்கத்தின் சார்பாக, ஐக்கிய இராச்சியத்தின் இத்தகைய தீர்மானங்கள் நமது நாட்டில் மேற்கொள்ளப்படும் நல்லிணக்கத் திட்டங்களைப் பாதிக்கும் என்று நாங்கள் கூறியிருந்தோம்.

கூடுதலாக, கடந்த காலங்களில் நிகழ்ந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாக உள்நாட்டு வழிமுறைகள் மற்றும் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்க அடிப்படையிலான திட்டங்களை நமது அரசாங்கம் செயல்படுத்தி வருகிறது.

அமெரிக்கா  மற்றும் கனடா 

இதற்கு முன்னர், அமெரிக்கா  மற்றும் கனடா போன்ற நாடுகள் இராணுவ அதிகாரிகள் உட்பட பல்வேறு தரப்பினர் மீதும் தடைகளை விதித்துள்ளன.

இலங்கை மீதான போர்க்குற்ற விசாரணை! அநுர தரப்பின் அடுத்த கட்ட நகர்வு | War Crimes Investigation Against Srilanka

அந்த வகையில், ஐக்கிய இராச்சியத்தின் இந்த நடவடிக்கை புதியதல்ல. இருப்பினும், இவ்வாறு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் தடைகள் சர்வதேச சட்டம் மற்றும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபைக்கு முரணானவை.

இலங்கை அரசாங்கம் தன்னிச்சையாக எடுக்கப்பட்ட இத்தகைய நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ளாது. அதன்படி, அரசாங்கம் அதை நிராகரித்தாலும், எங்கள் தெளிவான சர்வதேச கொள்கையின்படி சர்வதேச சட்டத்தின்படி நாங்கள் செயல்படுவோம்’. என்றார்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments