அண்மைக்காலமாக தாயகத்தில் காணிகளுக்குத் தட்டுப்பாடு நிலைமை ஏற்பட்டுள்ளதுடன், ‘பேர்மிட்’ (Permit) காணிகளை விற்பனை செய்யும் மோசடி இடம்பிடிக்கின்றமை அம்பலமாகி உள்ளது.

அண்மையில் பிரான்சில் இருந்து கிளிநொச்சியில் காணி ஒன்றை கொள்வனவு செய்த புலம்பெயர் தமிழர், இன்று பணத்தையும் இழந்து, காணியையும் இழந்துள்ளதாக  கூறப்படுகின்றது.

தாயகத்தில் காணி வாங்கும் புலம்பெயர் தமிழர்கள் அவதானம்; மாட்டிக்கொள்ளாதீர்கள்! | Diaspora Tamils Buying Land Homeland Be Cautious

பேர்மிட் காணிகளின்   உரிமையாளர் அரசாங்கம்தான்

இலங்கையில் அரசாங்கத்தினால் காணி இல்லாத பொதுமக்களுக்கு வாழ்வாதாரத்துக்காக வழங்கப்படுவதே இந்த பேர்மிட் காணிகள்.

இந்த காணிகளின் உண்மையான உரிமையாளர் அரசாங்கம்தான். நீங்கள் எவ்வளவு பணம் கொடுத்தாலும், அதன் உரிமைப் பத்திரம் சட்டப்பூர்வமாக உங்கள் பெயருக்கு மாறாது.

விற்றவருக்கே அந்தக் காணி எப்போதும் சொந்தமாக இருக்கும். அதேவேளை ஒருவர் பேர்மிட் காணியை விற்க வேண்டுமானால், அவருக்கு வேறு ஒரு சொந்தக் காணி இருக்க வேண்டும் என்பது விதி. ஆனால் பல தரகர்கள் இந்த உண்மையை மறைத்து விடுகிறார்கள் என்றும் சுட்டிகாட்டப்பட்டுள்ளது.

எனவே புலம்பெயர் தேச உறவுகள் காணி வாங்கும்போது மிகதீவிரமாக விசாரணை செய்து காணைகளை கொள்வனவு செய்யுமாறும் சமூக ஆர்வலர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.  

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments