யாழில் துப்பாக்கிச் சூட்டு காயத்துடன் இளைஞன் மீட்பு – வைத்தியசாலையில் அனுமதித்த பொலிஸார்இன்று அதிகாலை 1.18 மணியளவில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில், துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் அனுமதிக்கப்பட்ட இளைஞன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த இளைஞனை பொலிஸார் மண்டைதீவு பகுதியில் இருந்து துப்பாக்கி சூட்டுக் காயங்களுடன் கொண்டு சென்றதாக கூறப்படுகின்றது.
இளைஞன் உயிரிழப்பு
இளைஞனின் தலையில் துப்பாக்கிச் சூட்டு காயம் இருப்பதாகவும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்துள்ளதாகவும் எமது பிராந்திய செய்தியாளர் தகவல் வழங்கினார்.

மேலும், துப்பாக்கிச் சூடு இடம்பெற்றதற்கான காரணங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.




