கொழும்பு ஜிந்துபிட்டியவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கொட்டஞ்சேனை உள்ள மகா வித்யாலய மாவத்தையில் மோட்டார் சைக்கிள் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இரண்டு பதாள உலக கும்பல்களுக்கு இடையிலான மோதலின் விளைவாக துப்பாக்கிச் சூடு நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

மன்னார் இளைஞன் கொழும்பில் சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? | Why Was The Mannar Youth Shot Dead In Colombo

ஜிந்துபிட்டியவில் உள்ள ஒரு கட்டிடத்தின் மேல் தளத்தில் அமைந்துள்ள ஒரு சிகையலங்கார நிலைத்தில் நடத்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்ததுடன் நான்கு பேர் காயமடைந்திருந்தனர்.

சம்பவத்தின் போது, உயிரிழந்தவர் மன்னாரை சேர்ந்த 20 வயதுடைய இளைஞன் என தெரியவந்துள்ளது.

காயமடைந்தவர்கள் முறையே 19, 27 மற்றும் 28 வயதுடையவர்கள் என்றும் அவர்கள் சிலாவத்துறை, கிராண்ட்பாஸ் மற்றும் கொட்டஞ்சேனையை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தைத் தொடர்ந்து, காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments