அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பேச்சுவார்த்தைகள் ஜெனீவாவில் நடைபெற்று வரும் நிலையில், ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமெனி அமெரிக்காவின் கருத்துக்கள் மற்றும் அச்சுறுத்தல்களுக்கு கடுமையாக பதிலளித்துள்ளார்.

அதாவது 47 ஆண்டுகளாக அமெரிக்கா இஸ்லாமியக் குடியரசை அழிக்க முடியவில்லை, என்று இன்று (17) நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 அலி கமெனி எச்சரிக்கை

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆட்சிமாற்றம் குறித்த பேச்சுவார்த்தைகளை விமர்சித்த அவர்,

“உலகின் மிகவும் வலுவான இராணுவம்” கூட ஒரு கட்டத்தில் கடுமையாக தாக்கப்பட்டால் எழுந்து நிற்க முடியாமல் போகலாம் என்று எச்சரித்துள்ளார்.

அமெரிக்க பேரரசின் வீழ்ச்சிக்கான அறிகுறி! இனிமேலும் நீங்கள் அதை செய்ய முடியாது.. அலி கமெனியின் பகிரங்க எச்சரிக்கை | Khamenei Mocks Trump Claims 47 Years Inability

அமெரிக்கா–ஈரான் இடையிலான இரண்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தைகள் ஜெனீவாவில் நடைபெற்று வருகின்றது. இதற்கு முன்பே இரு நாடுகளுக்கும் இடையே வார்த்தைப் போர் தொடங்கியிருந்தது. அமெரிக்கா தனது விமானக் கப்பல்களை மத்திய கிழக்கு பிராந்தியத்துக்கு அனுப்பியிருந்தது.

அமெரிக்கா, பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் ஈரான் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்று அமெரிக்கா எச்சரித்ததாக அலி கமெனி குறிப்பிட்டார்.

முட்டாள்தனமான செயல்

“அமெரிக்கர்கள் கூறுகின்றனர் – உங்கள் அணு ஆற்றல் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவோம்; ஆனால் அதன் முடிவு, நீங்கள் அந்த ஆற்றலைக் கொண்டிருக்கக்கூடாது என்பதாக இருக்க வேண்டும் என்கிறார்கள்.

அப்படி என்றால் பேச்சுவார்த்தைக்கு இடமே இல்லை. உண்மையாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றால், அதன் முடிவை முன்கூட்டியே தீர்மானிப்பது தவறும் முட்டாள்தனமான செயலும் ஆகும், “அணு ஆற்றல் எங்கள் மறுக்க முடியாத உரிமை. இது சர்வதேச அணு ஆற்றல் முகாமை வழிகாட்டுதல்களிலும் இடம்பெற்றுள்ளது,” என்று அலி கமெனி குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க பேரரசின் வீழ்ச்சிக்கான அறிகுறி! இனிமேலும் நீங்கள் அதை செய்ய முடியாது.. அலி கமெனியின் பகிரங்க எச்சரிக்கை | Khamenei Mocks Trump Claims 47 Years Inability

International Atomic Energy Agency (IAEA) விதிகளின்படி, அனைத்து நாடுகளுக்கும் அணு மற்றும் செறிவூட்டும் நிலையங்களை வைத்திருக்க உரிமை உண்டு எனவும் அவர் வலியுறுத்தினார்.

அமைதிக்கான அணு தொழில் என்பது போர் செய்ய அல்ல; அது விவசாயம், சிகிச்சை, சுகாதாரம் மற்றும் ஆற்றல் சார்ந்த தேவைகளுக்காக நாட்டை இயக்குவதற்காக,” என்றும் அவர் கூறினார்.

இதில் அமெரிக்கா தலையிடுவது ஏன்?” என்றும் கேள்வி எழுப்பினார்.

ஆபத்தான இராணுவ சாதனம்

ஊழல்மிக்க மற்றும் அடக்குமுறையைக் கொண்ட அமெரிக்க பேரரசின் வீழ்ச்சிக்கான அறிகுறி அதன் பகுத்தறிவின்மையே. எங்கள் நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவது அதற்கு எடுத்துக்காட்டு,” என எச்சரித்துள்ளார்.

மேலும், “உங்கள் ஏவுகணைகளை இந்த வரம்புக்குள் வைத்திருங்கள்” என்று அமெரிக்கா கூறுவதாக அவர் குறிப்பிட்டார். “அது உங்களுக்கென்ன? தடுப்பு ஆயுதங்கள் இல்லையெனில், ஒரு நாடு எதிரியால் நசுக்கப்படும்,” என்றார்.

அமெரிக்க பேரரசின் வீழ்ச்சிக்கான அறிகுறி! இனிமேலும் நீங்கள் அதை செய்ய முடியாது.. அலி கமெனியின் பகிரங்க எச்சரிக்கை | Khamenei Mocks Trump Claims 47 Years Inability

47 ஆண்டுகளாக அமெரிக்கா இஸ்லாமியக் குடியரசை அழிக்க முடியவில்லை. அதுவே ஒரு ஒப்புதல். இனிமேலும் நீங்கள் அதை செய்ய முடியாது.” அமெரிக்கா ஈரானை நோக்கி போர் கப்பலை அனுப்பியுள்ளதாக கூறியதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஒரு போர் கப்பல் ஆபத்தான இராணுவ சாதனமாக இருக்கலாம். ஆனால் அந்தக் கப்பலை கடலின் அடிக்குக் கொண்டுசெல்லக்கூடிய ஆயுதம் அதைவிட ஆபத்தானது,” என்று அவர் கடுமையாக எச்சரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments