ஒரே இடத்தில் அடுத்தடுத்து நடந்த அசம்பாவிதம் ; இறுதியில் காத்திருந்த பெரும் துயரம்வீரம்புகெதர பொலிஸ் பிரிவின் குருநாகல்-நாரம்மல வீதியில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் சாரதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் நேற்று (18) காலை நாரம்மல, எசல உயன சந்திக்கு அருகில் நடந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஒரே இடத்தில் அடுத்தடுத்து நடந்த அசம்பாவிதம் ; இறுதியில் காத்திருந்த பெரும் துயரம் | Accidents One After Another At Same Spot

 மேலதிக விசாரணை

சம்பவம் தொடர்பில் தெரியவருதாவது,

நாரம்மலை நோக்கிச் சென்ற ஒரு கார் முதலில் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி ஒரு மின் கம்பத்தில் மோதியுள்ளது. மின் கம்பம் கவிழ்ந்து வீதியின் குறுக்கே விழுந்தது.

குருநாகல் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள், மின் கம்பத்தில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் சாரதி உடனடியாக குருநாகல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்துடன் தொடர்புடைய காரின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் வீரம்புகெதர பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments