திருகோணமலைக்கு 550 சுற்றுலாப் பயணிகளுடன் எம்.வி கிறிஸ்டல் சிம்போரி என்ற கப்பல் இன்று (23) திருகோணமலை துறைமுகத்தை சென்றடைந்தது.

இந்தக் கப்பலில் அவுஸ்திரேலியா, இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் பிரவேசித்தனர்.

திருகோணமலைக்கு வந்த பிரம்மாண்டமான கப்பல்! | Mv Crystal Symphony Ship Arrives In Trincomalee

திருகோணமலையை வந்தடைந்த சுற்றுலாப் பயணிகள் திருகோணமலை, சீகிரியா, ஹபரான போன்ற இடங்களை பார்வையிடவுள்ளனர். இந்தக் கப்பலில் 497 பணிக்குழாமினரும் அடங்குகின்றனர் .

இந்நிலையில் கிழக்கு மாகாணத்தின் சுற்றுலா மையமான திருகோணமலைக்கு இந்த சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளமையானது சுற்றுலாத் துறைக்கு பெரும் உந்துசக்தியாக அமையும் என சுற்றுலாத்துறை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments