முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த துவிச்சக்கர வண்டியொன்று பட்டப்பகலில் திருடப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த துவிச்சக்கர வண்டி தனியார் கல்வி நிலையத்திற்கு கல்வி பயில வந்த மாணவர்களால் வீதி ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், இளைஞன் ஒருவர் துணிச்சலுடன் அதனை திருடி செல்லும் காணொளி அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த CCTV காணொளியில் தெளிவாக பதிவாகியுள்ளது.

முள்ளியவளையில் பட்டப்பகலில் துவிச்சக்கர வண்டி திருட்டு | Cycle Stolen In Broad Daylight In Mulliyavalli

திருட்டில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இளைஞனின் உருவம் காணொளியில் பதிவாகியுள்ள நிலையில், அவரை அடையாளம் காண பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments