பருத்தித்துறை பிரதேச சபை எல்லைக்குள் இராணுவத்தால் நடாத்தப்படுகின்ற வர்த்தக நடவடிக்ககளை தடை செய்வது என்றும், அரசால் கொண்டு வரப்படவிருக்கின்ற பயங்கர வாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் புதிய சட்டம் கொண்டுவருவதை நிறுத்த வேண்டும் என்றும், ஏற்கனவே இருக்கின்ற பயங்கரவாத தடுப்பு சட்டத்தை நீக்க கோரியும் இன்று சபையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பருத்தித்துறை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு தவிசாளர் உதயகுமார் யுகதீஸ் தலமையில் காலை 10:20 மணியளவில் யத்தத்தில் உயிர்நீத்த உறவுகளுக்கும், மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு சபை அமர்வு ஆரம்பமானது.

இன்றைய அமர்விலேயே குறித்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சபையில் தீர்மானம் 

தொடர்ந்து பயங்கரவாத தடை சட்டத்தை நீக்க கோரியும், புதிதாக கொண்டுவரப்பட இருக்கின்ற பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கின்ற சட்டத்தை மீள பெறகோரியும் சபையில் தீர்மானம் நிறைவற்றப்பட்டது.

இராணுவத்தினர் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது! முன்வைக்கப்பட்ட தீர்மானம் | Army Personnel Should Engage Business Activities

இதில் சபை அமர்வில் கலந்துகொண்ட 19 உறுப்பினர்களில் 15 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர்.

இதேவேளை பருத்தித்துறை பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் இராணுவத்தினர் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்றும், அதனால் மாணவர்கள் உட்பட சிறுவர்கள் புகை மது பழக்கத்தில் ஈடுபடுவதாகவும், இராணுவம் தமது பாதுகாப்பு வேலைகளில் மட்டும் ஈடுபட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதனாலேயே பொதுமக்களுக்கு வியாபார நடவடிக்கைகள் மேற்கொள்ள கூடாது என்றும் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுடன் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்ற்பட்டன.

இராணுவத்தினர் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது! முன்வைக்கப்பட்ட தீர்மானம் | Army Personnel Should Engage Business Activities

மேலும் நிதிக் குழுவால் அனுமதிக்கப்பட்ட நிதி நடவடிக்கைகள் பல வற்றிற்கும் அனுமதி வழங்கியது.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments