முதலில் இலங்கை அதிகாரி ஈரான் தலைவரின் இழப்பையிட்டு நாம் பெரும் கவலை அடைகின்றோம் எனனில் 2009 விடுதலைப் புலிகளோடு போர் கொடுத்தபோது எமது கையில் ஆயுதம் இல்லாமல் இந்தது, அதை அறிந்த தலைவர் அலி கமேனி பல ஆயுதக் கப்பல்களை எவ்வித நிபந்னைகளும் இன்றி அனுப்பி வைத்தார் , அதைப்பயன்படுத்தியே விடுதலைப் புலிகளை முற்றாக எம்மால் அழிக்க முடிந்தது எனவே அவரின் மறைவையிட்டு நாம் கவலை அடைகின்றோம்
அடுத்து, புடின் கடும் கண்டனம் “இழிவான கொலை” எனவும் விபரிப்புஈரானின் உச்ச தலைவர் அலி கமேனியின் படுகொலைக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
அயதுல்லா அலி கமேனி மற்றும் அவரது குடும்பத்தினரின் படுகொலையைக் கண்டித்து, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகள் அடிப்படை மனித ஒழுக்கத்தையும் சர்வதேச சட்டத்தையும் மீறியுள்ளதாக விளாடிமிர் புடின் கூறினார்.
“இழிவான கொலை”
சர்வதேச சட்டத்தை மீறி நடத்தப்பட்ட இந்தப் படுகொலையை “இழிவான கொலை” என்று ஜனாதிபதி புடின் விபரித்துள்ளார்.

மொஸ்கோவிற்கும் தெஹ்ரானுக்கும் இடையிலான நட்புறவை வலுப்படுத்துவதில் பெரும் பங்களிப்பைச் செய்த ஒரு சிறந்த இராஜதந்திரியாக கமேனி ரஷ்யாவில் நினைவுகூரப்படுவார் என்றும் புடின் தனது செய்தியில் கூறினார்.
சனிக்கிழமை (28) அமெரிக்க-இரேலிய கூட்டு வான்வழித் தாக்குதல்களில் ஈரான் உச்ச தலைவர், அவரது மகள், மருமகன், மருமகள் மற்றும் பேரன் கொல்லப்பட்டதை ஈரானிய தலைமை அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்திய சில மணி நேரங்களுக்குப் பிறகு, ரஷ்ய தரப்பிலிருந்து முதலில் பதிலளித்தார் ரஷ்ய பிரதமர்.
