மத்திய கிழக்கில் நடைபெறும் போரை முன்னெடுக்க அமெரிக்கா இனி பிரித்தானியாவை சார்ந்திருக்காது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார்.

 ஈரானுக்கு எதிராக அமெரிக்கா முன்னெடுத்து வரும் போருக்கு ஆதரவு வழங்க மறுத்ததற்காக பிரித்தானிய பிரதமர்  ஸ்டார்மரை கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதனால் அமெரிக்கா – பிரித்தானியா இடையிலான சிறப்பு உறவு (Special Relationship) பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

அமெரிக்கா மற்றும் பிரித்தானியா 

ஸ்டார்மர் குறித்து ட்ரம்ப் கூறுகையில்,

அமெரிக்கா இனி பிரித்தானியாவை சார்ந்திருக்காது! ட்ரம்ப் கடும் எச்சரிக்கை | Trump Warns Us Will Not Depend On Britain

“அவர் உதவியாக இருக்கவில்லை. பிரித்தானியாவில் இருந்து இப்படிப்பட்ட நிலைப்பாட்டை நான் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை.

அமெரிக்கா மற்றும் பிரித்தானியா இடையிலான உறவுகள் கணிசமாக மாறிவிட்டது.

இது முற்றிலும் மாறுபட்ட உலகம். உங்கள் நாட்டுடன் முன்பு இருந்த உறவிலிருந்து இது மிகவும் வேறுபட்டது.

ஒருகாலத்தில் மிகவும் உறுதியான கூட்டணியாக இருந்த இந்த உறவு இவ்வளவு அழுத்தத்தை சந்திக்கும் என்று நினைக்கவில்லை” என கூறியுள்ளார்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments