சைப்ரஸில் அமைந்துள்ள பிரித்தானியாவின் RAF (Akrotiri) அக்ரோதிரி விமானப்படைத் தளம் மீது ஈரானின் ‘ஷாஹெட்’ ரக தாக்குதல் ட்ரோன் ஒன்று விழுந்து வெடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தச் சம்பவத்தை இங்கிலாந்து பாதுகாப்பு அமைச்சகம் இன்று அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.

தாக்குதலால் ஏற்பட்ட சேதங்கள் அல்லது உயிரிழப்புகள் குறித்து இதுவரை விரிவான தகவல்கள் வெளியிடப்படவில்லை.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும், பாதுகாப்பு நடவடிக்கைகள் வலுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இச்சம்பவம் பிராந்திய பாதுகாப்பு சூழ்நிலைக்கு புதிய பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
