ஐசிசி டி20 உலகக் கிண்ணத் தொடர் இன்று இடம்பெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது.

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின.

இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இந்திய அணி ஐசிசி டி20 உலகக் கிண்ணத் தொடருக்கு தெரிவு 

இதற்கமைய, முதலில் களமிறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்களை இழந்து 253 ஓட்டங்களை குவித்தது.

துடுப்பாட்டத்தில் இந்திய அணி சார்பில் சஞ்சு சாம்சன் அதிகபட்சமாக 89 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.

இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்தியா அணி | India Advances To Final After Defeating England

பந்துவீச்சில் இங்கிலாந்து அணி சார்பில் ஆதில் ராஷித் மற்றும் வில் ஜெக்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.

அதனடிப்படையில் 254 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 246 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

துடுப்பாட்டத்தில் இங்கிலாந்து அணி சார்பில் ஜெகெப் பெத்தல் 105 ஓட்டங்களையும் வில் ஜெக்ஸ் 35 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

பந்துவீச்சில் இந்திய அணி சார்பில் ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

அதனடிப்படையில் இந்த வெற்றியின் மூலம், 2026 டி20 உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்குத் இரண்டாவது அணியாக இந்தியா தெரிவாகியுள்ளது.

அந்த வகையில் இந்தியா அணி எதிர்வரும் 8 ஆம் திகதி நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்ளவுள்ளது.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments