குவைத்தில் உள்ள அமெரிக்க இராணுவ நிலைகளை இலக்கு வைத்துத் தான் தாக்குதல் நடத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தத் தாக்குதல்கள் வரும் மணித்தியாலங்களுக்கு தொடரும் என்றும் ஈரான் இராணுவம் அறிவித்துள்ளதாக ஈரான் அரச ஊடகமொன்றை மேற்கோள் காட்டி வெளிநாட்டு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இராணுவ நடவடிக்கை

இந்தத் தாக்குதல் நடவடிக்கைகள் இன்னும் முடிவுக்கு வரவில்லை என்றும், வரும் மணித்தியாலங்களிலும் இவை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என்றும் ஈரான் இராணுவம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய கூட்டுப் படைகள் ஈரான் மீது மேற்கொண்டு வரும் இராணுவ நடவடிக்கைகளுக்குப் பதிலடியாகவே ஈரான் இந்தத் தாக்குதல்களை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது ஏற்பட்டுள்ள இந்த யுத்த சூழ்நிலை காரணமாக குவைட்டில் உள்ள அமெரிக்கத் தூதரகம் தனது செயற்பாடுகளை இடைநிறுத்தியுள்ளதுடன், குவைட் வான் பாதுகாப்புத் துறையினரும் அவசர நிலைப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளனர்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments