ஈரானிய எண்ணெய் கிடங்குகள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குறைந்தது நான்கு எரிபொருள் தாங்கி ஊர்தி சாரதிகள் உயிரிழந்துள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது .

இந்தத் தாக்குதல்கள் டெஹ்ரான் மற்றும் அல்போர்ஸ் பகுதிகளில்  எண்ணெய் சேமிப்பு நிலையங்கள் மற்றும் ஒரு எண்ணெய் உற்பத்தி பரிமாற்ற மையத்தை இலக்கு வைத்து நடத்தப்பட்டுள்ளன.

தாக்குதல்களைத் தொடர்ந்து  தீயணைப்புப் படையினர் மற்றும் பாதுகாப்புப் படையினர் தீயை அணைக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

அதேவேளை தாக்குதல்கள் நடத்தப்பட்ட போதிலும், நாட்டில் எரிபொருள் விநியோகத்திற்கு எவ்வித தட்டுப்பாடும் நிலவவில்லை என ஈரானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எரிபொருள் விநியோகக் கட்டமைப்பு சீராக இருப்பதை உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக ஈரானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments