அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டரம்ப் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை திங்கட்கிழமை தொலைபேசியில் பேசிக் கொண்டு ஈரான் தொடர்பான நிலைமை உள்ளிட்ட பல முக்கிய விஷயங்களைப் பற்றி விவாதித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த விடயத்தை புடினின் உதவியாளரான யூரி உஷாகோவ் வெளியிட்டுள்ளார்.

சுமார் ஒரு மணி நேரம் நீண்ட இந்த உரையாடல், இந்த ஆண்டில் இரு தலைவர்களுக்கிடையே நடந்த முதல் தொலைபேசி பேச்சு என கூறப்படுகிறது.

புடினின் கருத்து

அதன்போது, ஈரான் தொடர்பான மோதலை அரசியல் மற்றும் தூதரக வழிகளில் விரைவாக தீர்க்க வேண்டும் என புடின் கருத்துக்களை முன்வைத்ததாக உஷாகோவ் தெரிவித்துள்ளார்.

போருக்கு மத்தியில் திடீரென புடினை தொடர்பு கொண்ட ட்ரம்ப்! | Trump Spoke With Putin About War With Iran

இதன்படி, ட்ரம்ப், ஈரான் தொடர்பான நிலைமை குறித்து தனது நிலைப்பாட்டை பகிர்ந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

முன்னதாக வெளியான தகவல்களின் படி, ஈரானுக்கு அமெரிக்க படைகள், கப்பல்கள் மற்றும் விமானங்களின் இருப்பிடங்கள் மற்றும் நகர்வுகள் பற்றிய புலனாய்வு தகவல்களை ரஷ்யா வழங்கி வருகிறது என்று அமெரிக்க உளவுத்துறை அறிக்கைகளை மேற்கோள் காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் இந்த தொலைபேசி உரையாடலில் பேசப்பட்டதா என்பது குறித்து உஷகோவ் எந்த தகவலை வெளியிடவில்லை.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments