• கூகுள் மெப்ஸ் நேவிகேஷன் அனுபவத்தில் கடந்த ஒரு தசாப்த காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய மேம்படுத்தலை கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை அறிவித்துள்ளார்.

இதன்படி, கூகுள் மெப்ஸுடன் ‘ஜெமினி ஏஐ’ மாடல் ஒருங்கிணைக்கப்பட்டு, “ஆஸ்க் மெப்ஸ்” (Ask Maps) எனும் புதிய அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இது பயனர்களுக்கு ஒரு தனிப்பட்ட உதவியாளராகச் (Personal Assistant) செயற்பட்டு, சிக்கலான கேள்விகளுக்கு உரையாடல் வடிவில் துல்லியமான பதில்களை வழங்கும்.

இதன் மூலம், “வரிசையில் நிற்கத் தேவையற்ற பொதுக் கழிப்பறை எங்கே உள்ளது?” அல்லது “அதிக நேரம் காத்திருக்காமல் தொலைபேசியை சார்ஜ் செய்யக்கூடிய கஃபே எது?” போன்ற நிஜ உலகச் சூழல் சார்ந்த கேள்விகளுக்குப் பயனர்கள் உடனடிப் பதில்களைப் பெற முடியும்.

அத்துடன், மேம்படுத்தப்பட்ட “இம்மர்சிவ் நேவிகேஷன்” (Immersive Navigation) வசதியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தச் சேவைகள் முதற்கட்டமாக அமெரிக்கா மற்றும் இந்தியாவில் ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ் சாதனங்களுக்கு வழங்கப்படவுள்ளன

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments