அமெரிக்க இராணுவத்தின் இரு உத்தியோகபூர்வ விமானங்கள் தமது வான்பரப்பிற்கு மேலாகப் பறப்பதற்கு விடுத்த கோரிக்கையை சுவிட்சர்லாந்து நிராகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சுவிட்சர்லாந்து நாட்டின் நடுநிலைமை தொடர்பான சட்டங்களை மேற்கோள் காட்டி இந்த அனுமதி மறுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இரண்டு விமானங்களுக்கு சுவிட்சர்லாந்து தனது வான்பரப்பைத் திறக்காத அதேவேளை, மேலும் மூன்று விமானங்களுக்கு வான்பரப்பைப் பயன்படுத்துவதற்கான அனுமதியை வழங்க அந்நாட்டு அரசு தீர்மானித்துள்ளது.

சுவிஸ் அரசாங்கத்தின் அறிவிப்பு

இந்தநிலையில், மார்ச் 15ஆம் திகதி திட்டமிடப்பட்ட இரண்டு போக்குவரத்து விமானங்களுக்கும், மார்ச் 17 ஆம் திகதி திட்டமிடப்பட்ட பராமரிப்பு விமானம் உட்பட மூன்று அமெரிக்க விமானங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சுவிட்சர்லாந்து அரசு எக்ஸ் (X) விடுத்துள்ள அறிக்கையில், இன்று சுவிஸ் அரசாங்கம் அமெரிக்காவின் இராணுவ வான்வழிப் பறப்பு கோரிக்கைகளைப் பற்றி விவாதித்தது.

நடுநிலைச் சட்டத்தை மேற்கோள் காட்டி, ஈரானில் போர் தொடர்பாக செய்யப்பட்ட இரண்டு கோரிக்கைகளை பெடரல் கவுன்சில் நிராகரித்தது. மூன்று விமானங்களை அனுமதிக்க முடிவு செய்தது.” என குறிப்பிடப்பட்டுள்ளது.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments