கம்பஹா, தொம்பே – பூகொட வீதியின் கிரிதர பகுதியில் நேற்று இடம்பெற்ற வீதி விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பூகொட நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று, அவ்வீதியைக் கடக்க முயன்ற பெண் பாதசாரி மீது மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

 வைத்தியசாலையில் அனுமதி 

விபத்தில் படுகாயமடைந்த மேற்படி பெண் உடனடியாகத் தொம்பே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிள் மோதி பெண் மரணம்! வீதியைக் கடந்தபோது நேர்ந்த விபரீதம் | 47 Year Old Woman Dies Hit By Motorcycle

உயிரிழந்தவர் கப்புகொட பகுதியைச் சேர்ந்த 47 வயதுடையவர் எனப் பொலிஸாரால் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இதேவேளை, குறித்த மோட்டார் சைக்கிளில் பயணித்த மேலும் இரண்டு பெண்கள் காயமடைந்த நிலையில் தொம்பே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சம்பவம் தொடர்பாகத் தொம்பே பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments