ஜெர்மனியில் இருந்து இலங்கை வந்த இளம் பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சிமிஹிந்தலை விகாரைக்கு வந்த ஜெர்மன் பெண்ணை பாலியல் சீண்டல் செய்ய முயன்ற தொல்பொருள் ஊழியர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை குறித்த இளம் பெண் நாட்டிற்கு வந்திருந்த நிலையில் இன்று வரலாற்று சிறப்புமிக்க மிஹிந்தலை ராஜமஹா விகாரைக்குச் சென்று ஸ்தூபியைப் பார்வையிட்டுள்ளார்.

முதற்கட்ட பொலிஸ் விசாரணையில் சந்தேக நபர் அவரை பாலியல் ரீதியாக சீண்ட முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அந்த நேரத்தில், மிஹிந்தலை விகாரைக்கு வந்த  குழு, இளம் பெண்ணின் அலறல் சத்தத்தை கேட்டு காட்டு பகுதி நோக்கி ஓடியுள்ளனர்.

கொலை முயற்சி

அந்த நேரத்தில், சந்தேக நபர் தான் அணிந்திருந்த ஆடையால் இளம் பெண்ணின் கழுத்தை நெரித்து கொலை செய்ய முயன்றுள்ளார். எனினும் குழுவினர் அந்த இளம் பெண்ணை காப்பாற்றியுள்ளனர்.

ஜெர்மனியில் இருந்து இலங்கை வந்த இளம் பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி | German Woman Faces Shocking Incident In Sri Lanka

சம்பவம் தொடர்பில் உடனடியாக மிஹிந்தலை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டு, சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

பாதிக்கப்பட்ட வெளிநாட்டுப் பெண்ணை அனுராதபுரம் மருத்துவ பரிசோதகர் பரிசோதனை உட்படுத்தியுள்ளார்.

மிஹிந்தலை புனித தலத்தில் பொலிஸ் பாதுகாப்பு இல்லாததால் இதுபோன்ற சம்பவங்கள் பதிவாகி வருவதாக மிஹிந்தலை ராஜமகா விஹாரையின் விகாராதிபதி தெரிவித்துள்ளார்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments