ஒவ்வொரு துளி இரத்தத்திற்கும் ஒரு விலை உண்டு என ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி தெரிவித்துள்ளார்.

ஈரானின் உயர்மட்ட பாதுகாப்பு அமைப்பான தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் தலைவரான அலி லாரிஜானி கொல்லப்பட்டது குறித்து கமேனி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த அறிக்கையில் அவர் மேற்படி விடயத்தைத் தெரிவித்துள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மரணச் செய்தி

இதனடிப்படையில், குறித்த அறிக்கையில், அலி லாரிஜானியின் மரணச் செய்தியைத் தான் மிகுந்த வருத்தத்துடன் ஏற்றுக்கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒவ்வொரு துளி இரத்தத்திற்கும் ஒரு விலை உண்டு...! மொஜ்தபா கமேனி நேரடி எச்சரிக்கை | Mojtaba Khamenei Warns Revenge For Larijani

அத்தோடு, அவரை அறிவுக்கூர்மை உடையவர், அர்ப்பணிப்புள்ள நபர் மற்றும் ஈரானின் அரசியல் கட்டமைப்பில் ஒரு தனிச்சிறப்பு வாய்ந்த ஆளுமை என்றும் மொஜ்தபா கமேனி பாராட்டியுள்ளார்.

எதிர்ப்புவாதிகள் 

இந்தநிலையில், இத்தகைய ஒரு நபர் படுகொலை செய்யப்பட்டிருப்பது சந்தேகத்திற்கு இடமின்றி அவரது முக்கியத்துவத்தையும் இஸ்லாத்தின் எதிரிகள் அவர் மீது கொண்டுள்ள வெறுப்பையும் காட்டுகிறது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இஸ்லாமிய எதிர்ப்புவாதிகள் தெரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால் இஸ்லாமிய அமைப்பின் மரத்தடியில் இந்த இரத்தத்தைச் சிந்துவது அந்த அமைப்பை மேலும் வலிமையாக்கவே செய்யும் என மொஜ்தபா கமேனி தெரிவித்துள்ளார்.

மேலும், நிச்சயமாக ஒவ்வொரு துளி இரத்தத்திற்கும் ஒரு விலை உண்டு எனவும், அதைத் தியாகிகளைக் கொன்ற அந்த குற்றவாளி கொலைகாரர்கள் விரைவில் செலுத்த வேண்டியிருக்கும் என்றும் அவர் அந்த அறிக்கையில் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments