திருகோணமலையில் வெற்றுக்காணியிலிருந்து வெடிக்காத நிலையில் மிதிவெடி ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

மூதூர் காவல் பிரிவுக்குட்பட்ட தோப்பூர் – அப்ரார்நகர் பகுதியில் இருந்தே இந்த மிதிவெடி மீட்கப்பட்டுள்ளது.

குறித்த நடவடிக்கை நேற்று (19-03-2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தின் அனுமதி

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், காவல்துறையினருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் இம்மிதிவெடி கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இம்மிதிவெடியில் ஜொனி என்றும் தமிழீழம் என்றும் தமிழில் எழுதப்பட்டுள்ளது.

திருகோணமலையில் தமிழ் ஈழம் எனப் பொறிக்கப்பட்ட மிதிவெடி மீட்பு! | Muthur Thoppur Landmine Recovered Sri Lanka

யுத்த காலத்தில் விடுதலைப் புலிகளால் இம்மிதிவெடி புதைக்கப்பட்டிருக்கலாமெனத் தெரிவிக்கப்படுகிறது.

இம்மிதிவெடியானது மூதூர் நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற்ற பின்னர் விசேட அதிரடிப்படையின் உதவியுடன் செயலிழக்கச் செய்யப்படவுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments