தனது மகளின் கணவரால் கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் யாழ். பல்கலைக்கழகத்தின் பெண் விரிவுரையாளரின் (54) சடலம் தனங்கிளப்பு – அறுகுவெளி பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது.

சாவகச்சேரி நீதிமன்ற எல்லைக்குள் சடலம் உருக்குலைந்த நிலையில் காணப்படுவதால் சாவகச்சேரி நீதிமன்ற பதில் நீதிவான் சடலத்தை பார்வையிட்ட பின், உடற்கூற்று பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

கணவன் – மனைவி இருவருக்கும் இடையே விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், குறித்த விரிவுரையாளரான தனது தாயையும் தங்கையையும், தங்கையின் கணவர் கடத்திச் சென்றதாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் விரிவுரையாளரின் மகன் முறைப்பாடு பதிவு செய்திருந்தார்.

நேற்றைய தினம் (20) திருகோணமலை பகுதியில் வைத்து 19 வயதுடைய மனைவி மற்றும் 21 வயதுடைய கணவன் என இருவரையும் கைது செய்தனர்.

அவர்களை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தபோது, விரிவுரையாளரான பெண், தனது மருமகனால் கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டதாக  வாக்குமூலத்தில் தெரிவிக்கப்பட்டது. 

பின்னர் கொலை செய்யப்பட்ட விரிவுரையாளரது சடலத்தை எடுத்துச் சென்று யாழ்ப்பாணம் – தனங்கிளப்பு, அறுகுவெளி பகுதியில் உள்ள  புதருக்குள் வீசியதாக வாக்குமூலம் வழங்கப்பட்டது.

அதனையடுத்து, நீண்ட நேர தேடுதலின் பின்னர் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. 


GalleryGalleryGallery

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments