அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைகள் குறித்த எந்தவொரு அறிக்கையையும் வரவேற்பதாக பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மரின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

ஈரானிய எரிசக்தி தளங்கள் மீதான எந்தவொரு இராணுவத் தாக்குதலையும் ஐந்து நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக ட்ரம்ப் அறிவித்ததை தொடர்ந்து மேற்கண்ட கருத்து வெளியாகியுள்ளது.

பிரித்தானியாவின் விருப்பம்

அதன்போது கருத்து வெளியிட்டுள்ள ஸ்டார்மரின் செய்தித் தொடர்பாளர், “போருக்கு விரைவான தீர்வு காண்பது உலக நலனுக்கு உகந்தது என்று நாங்கள் எப்போதும் கூறி வருகிறோம். குறிப்பாக, ஹோர்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்பட வேண்டும்.

ட்ரம்பின் அந்த முடிவு தொடர்பில் பிரித்தானியாவின் நிலைப்பாடு வெளியானது! | Uk Welcomes Us Halting Attack On Iran

கடந்த வாரம் எங்கள் கூட்டாளிகளுடன் நாங்கள் வெளியிட்ட கூட்டறிக்கையில் நீங்கள் காண்பது போல, அது எங்களுக்கு ஒரு முன்னுரிமை ஆகும்.” என்றார்.

மத்திய கிழக்கில் பதற்றத்தைத் தணிப்பதற்கும், போருக்கு விரைவான தீர்வு காண்பதற்கும் பிரிட்டன் விரும்புவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments