மத்திய கிழக்கில் உக்கிர போர் நடந்து கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில் இஸ்ரேலில் பணியாற்றிய இலங்கைப் பெண் ஒருவர் தனியாக இலங்கைக்கு வந்த தனது பயங்கர அனுபவம் தொடர்பில் தெரிவித்த கருத்து.

நான் முக்கியான தேவைமித்தமே புறப்பட்டு வந்தேன். நான் இஸ்ரேலில் இருந்து இலங்கைக்கு வருவது எனது கணவர் பிள்ளைகள் மட்டுமே அறிவர்.

என்னிடம் இருக்கும் நண்பர்களுக்கு கூட அறிவிக்கவில்லை.ஏனென்றால் அவர்கள் போக விடமாட்டார்கள்.

13 வருடங்கள் இஸ்ரேலில் தொழில் செய்கிறேன்

அவ்வளவு பயங்கரமான பயணமாகும்.நான் 13 வருடங்கள் இஸ்ரேலில் தொழில் செய்கிறேன்.எந்த யுத்தத்திலும் நான் இலங்கைக்கு வரவில்லை.

யுத்தம் நடந்தாலும் மக்கள் தங்களின் அன்றாடம் பணிகளை செய்து கொண்டிருக்கும் அளவுக்கு பாதுகாப்பு இருக்கிறது.

இப்போது பஸ் நிறுத்தும் இடத்திலும் பாதுகாப்புக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஜோர்தான எல்லை அல்லது எகிப்து எல்லையூடாகவே வர முடியும்.

இஸ்ரேலிலிருந்து தனியாக இலங்கை வந்த பெண்! பயணத்தின் பயங்கர அனுபவங்கள்... | Israel Sri Lanka Workers

ஆனால் எகிப்து எல்லையூடாக வருவது கஷ்டமான காரியமாகும்.எமது நாட்டு சில இளைஞர்கள் அவர்களில் தொழில் வீசா முடிவடைந்த நிலையில லெபனான் எல்லையூடாக செல்ல முயற்சித்தனர்.

அவர்கள் திரும்பி இஸ்ரேலுக்கு வருபவர்கள் அல்ல.அவர்கள் பிரயாண கஷ்டங்களை அனுபவித்தனர்.

அவர்களுக்கு தூதுவராலயம் உதவி செய்தது.

ஜோர்தான் எல்லையூடான பயணம்

நான் ஜோர்தான் எல்லையூடாக தான் வந்தேன்.இலங்கைக்கு வருவதற்கு தூதுவராலயம் ஊடாக வீசாவுக்கு நேரடியாக விண்ணப்பிக்க முடியாது.

நான் முகவர் ஊடாகவே விண்ணப்பித்தேன்.72 மணித்தியாலத்திற்குள் வீசா கிடைத்தது.இலங்கையர்கள் அதிகமானோர் தமிழ் சிங்கள புத்தாண்டுக்கு வருவதற்காக வீசாவுக்கு விண்ணப்பித்திருந்தனர் ஆனால் அனைத்தும் தள்ளுப்படி செய்யப்பட்டுள்ளது.

இலங்கையர் யாரும் முடங்கி இருக்கவில்லை.புத்தாண்டுக்கு வருவதற்கு முயற்சித்தவர்களுக்கே முடியாமல் போனது.

கிபீர் விமான சத்தத்தில் காதில் ஏற்பட்ட வலி

நேற்று முன்தினம் 12 மணிக்கு இலங்கைக்கு வந்தேன்.ஆனால் ஒரு பெண்ணாக பயங்கர அனுபவமாக இருந்தது.

நான் இஸ்ரேலின் வடக்கு பகுதியில் தான் இருந்தேன். லெபனானுக்கு தெற்கே.நான் இருந்த இடத்திற்கு அருகில் விமானப் படைத்தளம் அமைந்துள்ளது.

இஸ்ரேலிலிருந்து தனியாக இலங்கை வந்த பெண்! பயணத்தின் பயங்கர அனுபவங்கள்... | Israel Sri Lanka Workers

கபீர் விமானங்களின் சத்தத்தில் காது கேட்காமல் போய்விட்டது.இன்னும் தெளிவாக கேட்ட முடியாமல் இருக்கிறது.ஏவுகணைகள் சத்தம் கேட்பதில்லை.

து நாட்டுக்குள் வருவதற்கு முன்னேரே வெடித்து விடும்.இலங்கையில் இருந்து சென்ற ஊழியர்கள் எவ்வித தடையும் இன்றி தொழில் செய்கின்றனர் என குறிப்பிட்டுள்ளார்

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments